Friday, November 29, 2013




ஓம் என்ற ஒலி

         ஒலிகளுக்கும் உருவம் உண்டு..! ஓம் என்ற ஒலியிலிருந்துதான் இந்த உலகம் தோன்றியது என்பார் திருமூலர். "ஓங்காரத் துள்ளே உதித்த ஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்காரத் தீதத்து உயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே!" பிரணவத்துள் தோன்றியதே இந்த உலகத்தின் பஞ்ச பூதங்கள், அவற்றில் விளைந்த மாற்றங்களில் அசையும் உயிர்களும், அசையா உயிர்களும் உண்டாயின. இந்த உலகம் ஒலியின் வடிவம் என்பதை ஞானம் கைவரப் பெற்றவர்கள் அறிந்திருந்தனர். பல சப்தங்களின் பிரதிபலிப்பே உலகம் என்பார்கள் அவார்கள். ஒரு பேரொளி இந்த பிரபஞ்சத்தையே நிரப்பி இருக்கின்றது. உலகம் முழுதும் ஒளி, உலகமெங்கும் ஒலி. ஆனால் சில ஒளி களைத்தான் நம் கண்கள் பார்க்கின்றன. சில ஒலிகளைத்தான் நம் காதுகள் கேட்கின்றன. அனால் ஒலிகளுக்கும் உருவம் உண்டு அதையும் பார்க்கலாம் என்கிறார்கள் சித்தர்கள். ஒலியைக் கேட்கமுடியும், அது எப்படி பார்ப்பது என்று யோசிக்கிறீர்களா? மந்திரங்கள் ஒலிவடிவானவை. அந்த மந்திரங்களை கண்ணால் கண்ட சித்தர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். ஆக, கண்ணால் ஒலியைக் காண்பது சாத்தியம் என்கிறார்கள் அவர்கள். நம்முடைய விருப்பங்களைத் தெரிவிக்கவும், நம்முடைய வேலைகளைக் குறித்தும் நாம் பேசுகின்றோம். இந்தப் பேச்சொலி நாம் வாய் திறந்து பேசும் முன் எங்கிருந்தது? மனதில் எண்ணமாக இருந்தது. அதற்க்கு முன் எப்படி இருந்தது? அது எண்ணங்களும், நினைவுகளுமாக முதலில் சூட்சும சப்தமாக இருந்தது. அதன் பிறகே வாய் மூலம் வெளிப்பட்டது. இந்த சப்தங்களை நான்கு வகையாகப்பிரிப்பர். அவை
1, வைகரி - செவியோசை
2, மத்திமை - கருத்தோசை
3, பைசந்தி - நினைவோசை
4, பரை - நுண்ணோசை,  
          என்பவை ஆகும். நம்முடைய ஒவ்வொரு எண்ணமும் சொல்லாக ஒலி வடிவம் பெறுவதற்க்கு முன் சூட்சும ஒலியாய் இருந்தவையே.அந்த சூட்சும ஒலியையே ஓம் என்கிறார்கள் சித்தர்கள். ஆக, ஓங்காரம் மூல சப்தம் எல்லாமந்திரங்களுக்கும், ஒலிகளுக்கும் அதுவே ஆதாரம் என்கிறார்கள் சித்தர்கள்.

நன்றி  : சித்தன் சிவமயம்
https://www.facebook.com/siththanarul

Monday, November 18, 2013

The End Of World

              The End Of World
                  

இந்தத் தூண் இடிந்தால் உலகம் அழிந்துவிடுமாம்!!!




மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டை 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரசசால் கட்டப்பட்டது.
1424 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை சாகசப்பயணிகள் விரும்பும் மலையேற்றத்துக்கான ஒரு அற்புதமான வாய்ப்பை தருகிறது.
இந்த அற்புதமான கோட்டையை நோக்கி மேலே ஏறும் பயணமானது சாகச ‘த்ரில்’ விரும்பிகளுக்கும் இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமாக இருக்கும்.
இதன் அருகிலுள்ள ஹரிஷ்சந்திரகட் சிகரத்தை பயணிகள் தவறவிட்டுவிடக் கூடாது. இச்சிகரப்பகுதியிலிருந்து ஒரு நாணயத்தை நீங்கள் கீழ் நோக்கி வீசி எறிந்தால் அது புவியீர்ப்பு சக்தியை மீறி மேல் நோக்கி தள்ளப்பட்டு மிதந்து செல்லும் அதிசயத்தை பார்க்கலாம்.
இங்குள்ள புவியியல் அம்சங்களே இப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்துகின்றன. அதாவது அரை வட்டப்பாறை அமைப்பும் கீழ் உள்ள பள்ளத்தாக்கில் நிலவும் அதிகபட்ச காற்றழுத்தச்சூழலும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
நன்றி : http://peppycinema.com/the-end-of-world/